உலகப் புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்தத் திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், அஸ்வின்,கிஷோர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தியும், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். அதில் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திரிஷாவும் தங்களது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில் தற்போது ஸ்ரீதர் பிரசாந்த் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.

இந்நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினி மற்றும் கமல் இருவரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யாராய் நடித்த ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்துள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
அப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள நிலையில் அதனை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் கொடுத்திருப்பது சீரியல் நடிகையும் டப்பிங் கலைஞருமான தீபா வெங்கட் என தகவல் வெளியாகி உள்ளது.அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டு அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
