சீரியல் நடிகையான மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை அன்மையில் திருப்பதியில் திடீரென திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்தில் குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் மற்றும் தொலைக்காட்சி துறை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட புதுமண தம்பதிகளை வாழ்த்தினார்.

மேலும் இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என அவர்களை வெளிப்படையாக கூறியுள்ளனர். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென இவர்களை திருமண கோலத்தில் பார்த்து அனைவருமே அதிர்ச்சியில் உறைந்தனர். இவர்களின் திருமணத்திற்கு ஏராளமான வாழ்த்துக்கள் குவிந்தாலும் மறுபக்கம் கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து திருமணத்திற்கு பிறகு மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவரும் பல youtube சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார்கள். இந்நிலையில் இவர்களின் திருமணம் குறித்து சர்ச்சை பேச்சுகளை ரசிகர்கள் ஒரு பக்கம் பேசிக் கொண்டிருக்க மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவரும் ஹனிமூன் பிளான் செய்துள்ளனர்.அதாவது இவர்கள் இருவரும் பல இடங்களுக்கு ஹனிமூன் செல்ல பிளான் செய்துள்ளதாகவும் அதில் முதலில் இரண்டு பேரும் லண்டன் அல்லது ஐரோப்பாவுக்கு ஹனிமூன் செல்ல உள்ளதாகவும் அதுவும் நவம்பர் மாதம்தான் போகிறோம் என இருவரும் பேட்டி அளித்துள்ளனர்.
