பாரதிராஜா மருத்துவ செலவுக்கு பணம் இல்லை?…. மனோஜ் பாரதிராஜா திடீர் விளக்கம்….உண்மை என்ன?!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் தான் பாரதிராஜா. இவர் இயக்கத்தில் வெளியான மண்வாசனை கலந்த பல்வேறு திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்துள்ளன. அது மட்டுமல்லாமல் 90களில் மிகச் சிறந்த நாயகிகளாக இருந்தவர்கள் பெரும்பாலானோர் பாரதிராஜாவின் மூலம் அறிமுகமானவர்கள் தான். பல முன்னணி இயக்குனர்கள் இவரிடம் தான் பாடம் கற்றுக் கொண்டனர். இவர் இயக்கத்தில் உருவாகும் அனைத்து படங்களுமே நல்ல கருத்து கதை கரு கொண்ட படங்களாக தான் இருக்கும்.

இதனிடையே பாரதிராஜாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக அண்மையில் தகவல் வெளியானது.கடந்த வாரம் மதுரை விமான நிலையத்தில் திடீரென அவர் மயக்கம் போட்டு விழுந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிறகு ஒருநாள் மதுரையிலேயே தங்கி விட்டு அடுத்த நாள் சென்னை திரும்பினார். இந்நிலையில் அவருக்கு திடீரென அஜீரண கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து சென்னையில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது உடல் நலம் தேடி நேற்று மாலை அவர் வீடு திரும்பினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா, அப்பா தற்போது நலமாக இருக்கிறார் ரொம்ப ஆக்டிவாக இருக்கிறார். பழைய பாரதிராஜாவை நீங்கள் பார்க்கலாம். அதே கேலி கிண்டல் அப்படியே உள்ளது.

என் அப்பாவிற்கு சிகிச்சை அளித்த அனைத்து மருத்துவர்களும் எங்களுக்கு கடவுள்தான் என்று பேசிய அவர், தனது தந்தையின் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவரது சிகிச்சைக்கான மொத்த செலவும் எங்களது குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் இருந்து மட்டுமே செலுத்தப்பட்டதாகவும் இணையத்தில் வெளியான தகவல் வதந்தி எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.