மேடையில் யாக்கை திரி பாடல்…. அடக்க முடியாமல் ஆட்டம் போட்டா சித்தார்த் – திரிஷா…. வைரலாகும் வீடியோ….!!!!

உலகப் புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின்என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்தத் திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், அஸ்வின்,கிஷோர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தியும், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். அதில் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திரிஷாவும் தங்களது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில் தற்போது ஸ்ரீதர் பிரசாந்த் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மட்டும் இல்லாமல் திரைத்துறையின் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.அப்போது நிகழ்ச்சிக்கு அழகான கெட்டப்பில் தேவதை போல வந்து இறங்கினார் திரிஷா. நிகழ்ச்சியின் இறுதிவரை இருந்து அனைத்து விஷயங்களையும் உற்சாகத்துடன் கண்டு களித்தார்.

இதனிடையே பாடல்களின் போது மிக உற்சாகமாக இருந்த அவர் குறிப்பாக யாக்கை திரி என்ற ஆயுத எழுத்து படத்தின் பாடலுக்கு இவரின் உற்சாகம் அளவுக்கு மீறி கரை புரண்டு ஓடியது. உட்கார்ந்த இடத்திலிருந்து நடனம் ஆடினார். அப்படத்தில் திரிஷாவுடன் இணைந்து நடித்த நடிகர் சித்தார்த்தம் த்ரிஷாவுடன் இணைந்து கொண்டாடினார். அந்தவீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு ஷேர் செய்யப்பட்டு வருகிறது.