“5 வருட காதல் போராட்டம்”…. குக் வித் கோமாளி புகழ் ஓபன் டாக்…. பேசிக் கொண்டிருக்கும்போதே மனைவியை…. வைரலாகும் வீடியோ….!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்தான் புகழ். அந்நிகழ்ச்சியில் ஒரு சில நாட்கள் மட்டுமே இருந்து வெளியேறிய இவர் அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இருந்தாலும் விஜய் டிவி கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.

அந்த நிகழ்ச்சியில் இவர் செய்யும் காமெடிகளுக்கு அளவே இல்லை. அந்நிகழ்ச்சியை தொடங்க இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது சபாபதி, வலிமை, யானை மற்றும் என்ன சொல்லப் போகிறாய் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சில பட வாய்ப்புகளும் இவர் கைவசம் வைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் Zoo கீப்பர் எனும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாக உள்ளார்.

இந்நிலையில் புகழ் 5 வருடமாக காதலித்து வந்த பெண்சி என்பவரை சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.உறவினர்கள் முன்னிலையில் இவர்களின் திருமணம் நடைபெற்ற நிலையில் பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் புகழ் மற்றும் பென்சியின் ஐந்து வருட காதல் போராட்டம் குறித்து இருவரும் அளித்துள்ள பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்தப் பேட்டியில் சீரியஸாக பேசிக் கொண்டிருக்கும்போது தனது மனைவியை புகழ் கலாய்த்துள்ளார்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் இதனை இணையத்தில் அதிக அளவு ஷேர் செய்து வருகிறார்கள்.