தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் உள்ளவர் தான் நடிகை ரெஜினா கசான்ட்ரா. இவர் சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். தற்போது தமிழ் படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை என்ற திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவர் தற்போது ஷாகினி டாகினி என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்தத் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் ரெஜினா உடன் இணைந்தே நடிகை நிவேதா தாமஸ் நடித்துள்ளார். இந்நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக ரெஜினா பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டியளித்து வரும் நிலையில், பிரபல ஊடகம் ஒன்று இருக்கு அவர் அளித்துள்ள பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது பேட்டியில் ரெஜினா ஆண்களை பற்றி தவறாக பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆனால் எதையும் விமர்சிக்காமல் சிரித்துக் கொண்டே சிக்கலில் மாட்டி உள்ளார் நிவேதா. அதாவது ஆண்கள் என்றால் பெண்களைப் பார்த்து வழிவார்கள். ஆண்களும் மேகியும் ஒன்றுதான். இரண்டுமே இரண்டு நிமிடங்களிலேயே முடிந்து விடும் என்று பேசி உள்ளார்.
https://twitter.com/prettyGowri/status/1568159736503349251
ரெஜினா இவ்வாறு பேசுகையில் நிவேதா தாமஸ் எந்த கருத்தையும் கூறாமல் சிரித்தார்.இவரின் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் இந்த வீடியோ வெளியாகி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.