அம்மாடியோ இவ்வளவு பெரிய வீடா?…. ஹைதராபாத்தில் சொந்த வீட்டை சுற்றி காட்டிய குக் வித் கோமாளி புகழ் கனி…. வைரல் வீடியோ….!!!

விஜய் டிவியில் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவாக உருவெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் கனி. அந்நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவர் தான். இவர் தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மூத்த மகள், இயக்குனர் திருவின் மனைவி. இதனைத் தவிர தனக்கென பல அடையாளத்தையும் சொந்தமாக கொண்டவர் தான் கனி.

முதலில் தொலைக்காட்சி தொகுப்பாளினி மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்த இவர் தற்போது தனது youtube சேனலில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஒரு பக்கம் குக்கிங் வீடியோ, கதை சொல்லும் தோழி,குடும்பத் தலைவி மற்றும் இரண்டு தங்கைகளுக்கு மூத்தா அக்கா என்று இவரின் லைப் ஸ்டைல் எப்போதும் பிஸியாக தான் இருக்கும்.

தற்போது கனி வள்ளி மயில் என்ற படத்தின் மூலம் படத்தில் நடிக்க உள்ளார். அண்மையில் படத்திற்கான பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகவும் கூறப்பட்டது இதனிடையே தனது ரசிகர்களுக்காக இவர் அடிக்கடி இணையத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்வது வழக்கம். அவ்வகையில் இவர் அண்மையில் ஹைதராபாத்தில் இருக்கும் தனது சொந்த வீட்டை வீடியோவாக வெளியிட்டுள்ள நிலையில் தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.