தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் செல்வராகவன்.இவரின் நடிப்பில் வெளியான பல படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். தற்போது இவர் நடித்துள்ள பகாசூரன் திரைப்படம் விரைவில் திரையில் வெளியாக உள்ளது.படத்தின் டிரைலர் அண்மையில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் தற்போது நானே ஒருவன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் இந்த மாதம் இறுதியில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். படத்தின் டீசர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நானே ஒருவன் திரைப்படத்தின் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அதற்கான பணிகளில் யுவன் சங்கர் ராஜா தீவிரம் காட்டி வருவதாக செல்வராகவன் மற்றும் தனுஷ் இருவரும் தங்களது பிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.அவ்வகையில் படத்தின் ரீ ரெகார்டிங் பணிகளின் போது எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்த செல்வராகவன் யுவன் சங்கர் ராஜாவை மேஸ்ட்ரோ என்று புகழ்ந்ததோடு அவரின் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
BACKGROUND SCORE !
Pure joy ???? working with the Maestro ????#NaaneVaruvean @thisisysr@theVcreations @dhanushkraja pic.twitter.com/3knbWIADMT— selvaraghavan (@selvaraghavan) September 13, 2022