விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளினியாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் பிரியங்கா. தற்போது சூப்பர் சிங்கர் ஆங்கராக இருக்கும் பிரியங்கா சமீபத்தில் தனது கேரியரில் 10 ஆண்டுகளை நிறைவு செய்திருந்தார். அதனை பலரும் ஒன்றாக கூடி கேக் வெட்டி கொண்டாடினர்.சின்னத்திரையில் பிரியங்காவிற்கு தனி ஒரு பெயரும் புகழும் உள்ளது.இன்னும் சொல்லப்போனால் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது என்று கூறலாம்.விஜய் டிவி டிடிக்கு பிறகு அனைவருக்கும் பிடித்தமான ஆங்கர் ஆக இருப்பவர் பிரியங்கா தான்.

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக கலக்கி வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று பங்கேற்ற நிலையில் இவர் பற்றி சில நெகடிவ் கமெண்ட் களும் வந்தன.அந்நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தவுடன் அந்த நெகடிவ் கமெண்ட்கள் அனைத்தும் இவரை பின்தொடர்ந்தது. அப்படிப்பட்ட நேரத்தில் இவருக்கு உறுதுணையாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இருந்துள்ளனர். இவர் எப்போதுமே பல நிகழ்ச்சிகளில் அம்மா மற்றும் தம்பி பற்றி பேசும்போது உடனே அழுது விடுவார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பிரியங்கா வீட்டிற்கு புதுவரவு வந்தது. அதாவது அவரின் தம்பி ரோஹித்துக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை மிகுந்த மகிழ்ச்சியுடன் பிரியங்கா இணையத்தில் பகிர்ந்த நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.இந்நிலையில் பிரியங்காவின் தம்பி மகள் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து அவரின் வீட்டுக்கு வந்துள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
இதனை ஸ்பெஷலாக கொண்டாட வேண்டும் என்பதற்காக வீடு முழுவதையும் அலங்கரித்து அவரின் பெயர் எழுதி இருக்கும் டி ஷர்டை பிரியங்கா, அவரின் அம்மா மற்றும் தம்பி ஒரே மாதிரியாக அணிந்து கொண்டு குழந்தைக்கு வெல்கம் கொடுத்து வரவேற்றனர்.அந்த புகைப்படங்களை பிரியங்கா இணையத்தில் பகிர்ந்த நிலையில் தற்போது அது வைரலாகி வருகிறது.