தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் அஜித். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்துள்ளனர். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.

இதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஏகே 61 படத்தில் நடிகர் அஜித் பிஸியாக உள்ளார். இதில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். ஹைதராபாத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. படத்தின் பூஜை போடப்பட்டதை தவிர அதன் பிறகு படத்தை குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

இருந்தாலும் படத்தைப் பற்றிய தகவல்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு தான் இருக்கின்றன. இந்தத் திரைப்படம் ஒரு வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகியுள்ளது. மேலும் படத்தில் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரு கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

படத்தின் படப்பிடிப்பு அண்மையில் விசாகப்பட்டினத்தில் முடிவடைந்த நிலையில் அஜித் தற்போது காஷ்மீர் மற்றும் லடாக் என வட இந்திய எல்லையில் உள்ள குளிர் பிரதேசங்களில் தனது நண்பர்களுடன் ஜாலியாக பைக் ரைடு செய்து வருகிறார். இவர்களுடன் நடிகை மஞ்சு வாரியாரும் இணைந்துள்ளார். இதனிடையே பைக் ரைடிங் போது வட இந்தியாவில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று அஜித் வழிபாடு செய்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.