திடீரென பெயரை மாற்றி டுவிட்டரை அதிர விட்ட திரிஷா…. குஷியில் ரசிகர்கள்…. என்ன காரணம்….?????

உலகப் புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்தத் திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், அஸ்வின்,கிஷோர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தியும், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். அதில் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திரிஷாவும் தங்களது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில் தற்போது ஸ்ரீதர் பிரசாந்த் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.

இதனிடையே அண்மையில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் பிரமோஷனுக்காக விக்ரம் மற்றும் திரிஷா ஆகியோர் கேரக்டர் பெயர்களை twitter பக்கத்தில் மாற்றி உள்ளனர். ட்ரெய்லர் ப்ரொபைலில் விக்ரம் ஆதித்த கரிகாலன் என பெயரை மாற்றினார்.

அவரைத் தொடர்ந்து நடிகை திரிஷாவும் குந்தவை என்று தனது பெயரை தற்காலிகமாக மாற்றியுள்ளார்.இவர்களைத் தொடர்ந்து மற்ற நடிகர்களும் தங்களது பெயர்களை விரைவில் மாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://twitter.com/trishtrashers/status/1545666540963373056