தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அந்தத் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர் அதன் பிறகு முன்னணி நடிகையாக முன்னேறினார். அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த், விக்ரம் மற்றும் தனுஷ் சொல்லிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம்,தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார். திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் ரஷ்யாவை சேர்ந்த விளையாட்டு வீரரான ஆண்ட்ரோ கோஸ்சீவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது கணவருடன் வெளிநாட்டில் செட்டிலான இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் ஸ்ரேயா நடித்து வருகிறார் .

இந்நிலையில் சூட்டிங் இல்லாத சமயங்களில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் நடிகை ஸ்ரேயா அவ்வப்போது பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
அவ்வகையில் மாலத்தீவில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் பிறந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடிய வீடியோவை அவர் இணையத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.