தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்துள்ளனர்.இவர் இறுதியாக நடித்த டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் சங்கரின் மகள் அதிதி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கின்றார்.

இப்படத்திற்கான பூஜை அண்மையில் நடைபெற்றது. பூஜையில் இயக்குனர் சங்கர் கலந்து கொண்ட நிலையில் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியதாக இணையத்தில் செய்திகள் வெளியாகின.ஆனால் தற்போது படத்தின் சூட்டிங் ஒரு வார்த்தையை நிறுத்தப்பட்டதாக ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.பொதுவாகவே நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் அவ்வபோது நிறுத்தப்படுவது வழக்கம் தான். அதற்கு என்ன காரணம் என்றால் சிவகார்த்திகேயன் மீது இருக்கும் கடன் பாக்கிகள் தான்.

இப்படத்தில் நடிக்க அதிதி சங்கருக்கு வேறு ஒரு பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த சில திரைப்படங்கள் தோல்வியை தழுவியதால் சிவகார்த்திகேயனுக்கு கடன் அதிகரித்து விட்டது. அதாவது 76 கோடி கடன் உள்ளதாக கூறப்படுகிறது. இதரிடையே சன் பிக்சர்ஸ் கடனை சிவா அடைத்து விட்டதாக சில தகவல்கள் வெளியாகி இருந்தாலும் இவருக்கு இருக்கும் கடன் மற்றும் படப்பிடிப்பு நிறுத்தம் பற்றி உண்மையான தகவல்கள் எதுவும் வெளியாகாமல் இருக்கின்றது.அண்மையில் படப்பிடிப்பு தொடங்கியதாக தகவல் வெளியான நிலையில் தற்போது திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
