அதே ஸ்டைல்…. தளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கிய லெஜண்ட் அருள்…. அதுவும் என்ன செஞ்சிருக்கார் தெரியுமா….????

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி என்று அனைவராலும் அறியப்படும் விஜய். இவர் தற்போது வம்ச இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா வந்தனா நடிக்கின்றார்.அதுமட்டுமல்லாமல் யோகி பாபு மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்தத் திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக பட குழுவினர் அறிவித்துள்ள நிலையில் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே வாரிசு நூறாவது நாள் சூட்டிங் முன்னிட்டு ராஷ்மிகா மந்தனா விஜயுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருந்தார். அதில் விஜய் 48 வயதானாலும் இன்னும் இளமை குறையாமல் அப்படியே இருப்பதாக ரசிகர்கள் பலரும் கமெண்ட்  செய்து வந்தனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள லெஜெண்ட் சரவணன், விஜயின் அந்த செல்பி புகைப்படத்தை போலவே முன்னாள் மூன்று முடியை தொங்கவிட்டு போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளார். அந்தப் புகைப்படம் தி லெஜன்ட் பட சூட்டிங்கில் எடுத்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.