பிக் பாஸ் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் பாடகி என் எஸ் கே ரம்யா. என் எஸ் கே குடும்பத்தை சேர்ந்தவரான இவர் சங்கீதத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். தனது சிறு வயது முதலே கர்நாடிக்கை முறைப்படி சங்கீதம் கற்றுக் கொண்டார். கிட்டத்தட்ட 16 வருடங்கள் சங்கீதம் கற்றுக் கொண்ட இவர் தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களிலும் பின்னணி பாடல்களை பாடி வருகின்றார்.

இதனிடையே கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.அதன் பிறகு இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீலக்குயில் என்ற தொடரில் கதாநாயகனாக நடித்த நடிகர் சத்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு அழகிய ஆண் குழந்தையும் உள்ளது.

இதனைத் தொடர்ந்து இருவரும் விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். குழந்தை பிறந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கழித்து தனது குழந்தையுடன் இருக்கும் வீடியோவை முதன் முறையாக ரம்யா இணையத்தில் வெளியிட்ட நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். தனது குழந்தைக்கு சிறு வயது முதலே பாடல் பயிற்சி கொடுத்து வருகிறார் ரம்யா.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
இந்நிலையில் தற்போது சத்யா தனது மகனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அட நம்ம ரம்யா சத்யாவின் மகனா இவர் நன்றாக வளர்ந்து விட்டாரே என்று கமெண்ட் செய்து புகைப்படத்தை இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.