ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அவ்வபோது பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. அதில் கலந்து கொள்ளும் பலரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளனர்.. அவ்வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ தான் சர்வைவர். இந்த நிகழ்ச்சியை ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய நிலையில் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக நடிகை விஜயலட்சுமி தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான போட்டியாளர்களில் ஒருவர் தான் ஐஸ்வர்யா கிருஷ்ணன். பிட்னஸ் ட்ரைனராக இருக்கும் இவர் பல திரை பிரபலங்களுக்கு பிட்னெஸ் ட்ரைனராக பயிற்சி அளித்து வருகின்றார்.இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் மாடலிங் செய்து வருவதில் பிஸியாக உள்ளார்.

இவ்வாறு பிசியாக இருக்கும் இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார். இவருக்கு ஆயிரக்கணக்கான இன்ஸ்டாகிராம் பாலோவர்ஸ் உள்ளனர்.இந்நிலையில் ஐஸ்வர்யா கிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்னுடைய காதலர் இவர்தான் என்று கூறி ஒருவரை அறிமுகம் செய்துள்ளார். நேற்று அவரின் பிறந்தநாள் என கூறியுள்ள ஐஸ்வர்யா கிருஷ்ணன், அவருடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவு செய்து தனது காதலர் என்று கூறியுள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
இதனைத் தொடர்ந்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ரசிகர்கள் புகைப்படத்தை இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.எனவே விரைவில் ஐஸ்வர்யா கிருஷ்ணன் தனது திருமணம் குறித்த தேதியை அறிவிப்பார் என்று ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.