சின்னத்திரையில் நட்சத்திர தம்பதிகளாக வளம் வருபவர்கள் தான் ரட்சிதா மகாலட்சுமி மற்றும் தினேஷ் தம்பதியினர். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் அனைவரின் நெஞ்சங்களையும் கொள்ளை அடித்தவர் நடிகை ரச்சிதா. முதல் பாகம் முடிவடைந்த பிறகு இரண்டாவது பாகத்திலும் இவர் தொடர்ந்து நடித்தார்.

பல்வேறு சீரியல்களில் கதாநாயகியாக நடித்து வந்துள்ளார். தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் சொல்ல மறந்த கதை என்ற தொடரில் நடித்து வருகிறார். சரவணன் மீனாட்சி சீரியலில் ஜோடியாக நடித்த பிறகு தினேஷ் மற்றும் ரக்ஷிதா இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

கன்னட நடிகையான இவர் தமிழில் அழகாக பேசி நடித்த நிலையில் ஒரு காலத்தில் டாப் சீரியல் நடிகையாக வளம் வந்தவர். இவர் கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் நடித்த பிறகு கலர்ஸ் தமிழில் இது சொல்ல மறந்த கதை என்ற தொடரில் நடிக்க ஆரம்பித்தார்.

தற்போது அந்தத் தொடர் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில் நடிகர் ரச்சிதா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை திட்டிய வண்ணம் நிறைய பதிவுகளை போட்டுள்ளார்.அதனைப் பார்த்தால் தொலைக்காட்சி சீரியல் நன்றாக ஓடியும் பாதியிலேயே நிறுத்தியதாக தெரிகிறது. ரட்சிதா போட்ட பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
