படித்து பட்டம் வாங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை…. அதுவும் எந்தத் துறையில் தெரியுமா?…. ரசிகர்கள் வாழ்த்து….!!!!

விஜய் டிவியில் குடும்ப கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை காவியா. இவர் முதன் முதலில் பாரதி கண்ணம்மா சீரியலில் தான் அறிமுகமானார். அதில் அவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் பிறகு யாரும் எதிர்பார்க்காத விதமாக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் என்ட்ரி கொடுத்தார்.

ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா திடீரென உயிரிழந்த காரணத்தால் முல்லை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகை காவியா தேர்வு செய்யப்பட்டார்.ஆரம்பத்தில் இவர் முல்லையாக ஏற்றுக் கொள்ள ரசிகர்கள் திணறிய நிலையில் தற்போது இவர் அந்த கதாபாத்திரத்திற்கு செட்டாகி விட்டார்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதிர் மற்றும் முல்லை கதாபாத்திரத்திற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.இதனிடையே பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லையாக நடித்து வருவது மட்டுமல்லாமல் நடிகை காவியா வெள்ளித்திரையிலும் ஹீரோயினியாக அறிமுகமாகியுள்ளார். அதன்படி லிப்ட் என்ற திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பிக் பாஸ் கவின் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் ஊர் குருவி என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இதில் கவினுக்கு ஜோடியாக காவியா களமிறங்குகிறார். திரைப்பட வாய்ப்புகள் தற்போது இவருக்கு குவிந்து வருவதால் சீரியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும் அவ்வபோது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் காவியா அப்போ போது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் தற்போது இவர் தான் படித்து பட்டம் பெற்ற புகைப்படம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.கட்டிடக்கலை நிபுணராக வேண்டும் என்ற சிறிய எண்ணம் இறுதியாக நிறைவடைந்து விட்டது என்றும் இந்த பயணத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என அவர் கூறி அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ள நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.