தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விக்ரம். இவரின் நடிப்பில் அண்மையில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கோப்ரா. இந்த திரைப்படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி செட்டி நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து கே எஸ் ரவிக்குமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹீர்பான் பதான், மியா சார்ஜ், ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தை லலித் குமார் தயாரித்துள்ளார். படத்தின் டிரைலர் அண்மையில் வெளியான நிலையில் 7 வித்தியாசமான கெட்டப் களில் விக்ரம் இப்படத்தில் நடித்து அசத்தியுள்ளார். இந்த ட்ரெய்லர் பிரபல டிவி நகைச்சுவை நடிகர் மற்றும் என்டர்டைனர் மதுரை முத்து இடம்பெற்றுள்ளார். இந்த படம் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் விக்ரமின் ரசிகை ஒருவர் அவரை நேரில் சந்திக்க சென்று இருந்த போது விக்ரம் செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.