“கொல காண்டுல இருக்கேன்”…. ப்ளூ சட்டை மாறனால் கடுப்பான கௌதம் மேனன்…. வைரலாகும் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இந்த திரைப்படம் கடந்த 18ஆம் தேதி வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ள இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்துள்ளது. ஆனால் திரைப்படம் குறித்து யூடுப் சேனல்கள் நடத்தி வரும் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

அவ்வகையில் ப்ளூ சட்டை மாறன் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக பேட்டி அளித்த கௌதம் மேனன் ப்ளூ சட்டை மாறன் மீது செம்ம கடுப்பில் இருப்பதாக பதிவு செய்துள்ளார். அதாவது ஒரு படம் எடுப்பதற்கு எவ்வளவு சிரமப்படுகிறோம் என்பது எங்களுக்கு தான் தெரியும், சொல்லக்கூடாது என்று தான் நினைக்கிறேன், ஆனா பயங்கர கடுப்பா இருக்கு.

ஒரு படத்தை கலாய்த்து விமர்சனம் செய்வது அவரின் யூடியூப் பக்கத்தில் நிறைய பார்வையாளர்கள் பார்ப்பதற்கு அவர் நிறைய விளம்பரம் தேடுவதற்காக மட்டும்தான். படத்திற்காக சிம்பு எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது எனக்கு நன்றாக தெரியும். வாய் பேச்சாளர் யாரும் கூறி விட முடியாது என்று பயங்கர கோபத்தில் கௌதம் மேனன் பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.