சின்னத்திரையில் நடிக்கும் பிரபலங்கள் பலரும் ரியல் லைஃபில் திருமணம் செய்து கொள்கின்றனர். அவ்வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியல் மூலம் அறிமுகமானவர்தான் ரேஷ்மா. இவர் அதே சேனலில் ஒளிபரப்பான ஒரு நடன நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார். அதன் பிறகு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த சீரியலில் இவருடன் கதாநாயகனின் தம்பியாக நடித்து வந்தவர் மதன்.

இவர் ஏற்கனவே கனா காணும் காலங்கள் என்ற சீரியலில் நடித்துள்ளார். இருந்தாலும் பூவே பூச்சூடவா சீரியலில் நடித்ததன் மூலம் தான் ரேஷ்மா மற்றும் மதன் இருவரும் மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். பின்னர் சில நாட்கள் கழித்து இருவரும் காதலித்து வருவதாக இணையத்தில் தகவல் பரவியது. அதனை அவர்களும் உறுதி செய்தனர். இவர்களின் காதல் இரு விட்டாருக்கும் தெரிய வர, அவர்கள் ஒப்புக்கொண்ட நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்தது.

திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அபி டெய்லர் சீரியலில் ஜோடியாக நடித்தனர். இதனிடையே இருவரும் அடிக்கடி தங்கள் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.இதனிடையே பூவே பூச்சூடவா சீரியல் நடிகர்கள் ரியூனியன் ஆகியுள்ளனர்.

அவது மதன் தனக்கு மனைவியாக நடித்த அவருடன் ஜோடி சேர்ந்து எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரீல் எக்ஸ் மனைவி கூட இவ்வளவு தைரியமா போட்டோ எடுக்குறீங்களே என்று மகனை ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.