உங்களுக்கு வெக்கமா இல்லையா…. பணத்துக்காக என்ன வேணாலும் பண்ணுவீங்களா…. மைனா நந்தினியை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்….!!!

விஜய் டிவி என்று சொன்னவுடன் பலரின் நினைவுக்கு வருவது மைனா நந்தினி தான்.இவர் தனது எதார்த்தமான நடிப்பாலும் நகைச்சுவை பேச்சாலும் ரசிகர்களை கொள்ளை அடித்தவர்.கட்டாயம் இவரை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் தான் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.

அந்த சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.அதனைத் தொடர்ந்து நடிகர் சிவக்கார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்திலும் சூரிக்கு மனைவியாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

இவரின் நகைச்சுவை காமெடிக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.இதனிடையே சீரியல் நடிகர் மற்றும் நடன இயக்குனரான யோகேஸ்வரன் என்பவரை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.அதுமட்டுமல்லாமல் நந்தினி சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்திருந்தார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Junglee Rummy இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@junglee_rummy)

இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் மைனா நந்தினி அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் யோகேஷ் ரம்மி விளம்பரத்தில் நடித்துள்ள வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் உங்களுக்கு வெட்கமா இல்லையா, பணத்திற்காக நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்வீர்களா என்று ரசிகர்கள் ஆதங்கத்தில் மைனாவை திட்டி தீர்த்து வருகிறார்கள். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.