குழந்தை பிறந்த பிறகு செம கெத்தாக…. இந்தியன் 2 படத்தில் களமிறங்கிய காஜல் அகர்வால்….. வாயடைத்துப்போன ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் இந்தியன் 2. இந்த படம் சில வருடங்களுக்கு முன்பு தொடங்க இருந்த நிலையில் பல பிரச்சனைகளுக்கு பிறகு தற்போது மீண்டும் தொடங்கியுள்ள படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தற்போது பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்தியன் 2 திரைப்படத்தில் இருந்து காஜல் அகர்வால் வெளியேறி விட்டதாக அண்மையில் தகவல் வெளியான நிலையில் சமீபத்தில் குழந்தை பெற்றெடுத்த பின்னர் இந்தியன் 2 திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க தயாராகிவிட்டார் காஜல் அகர்வால். குழந்தை பிறந்த பிறகு படத்திற்காக ரிஸ்க் எடுத்து தில்லாக குதிரை ஓட்டும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவை பகிர்ந்துள்ள காஜல் அகர்வால்,குழந்தை பிறந்த பிறகு உடற்பயிற்சி செய்து மீண்டும் பழைய உடல் எடையை கொண்டு வருவது சவாலான விஷயம்தான். நீண்ட நேரம் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்தாலும் உடல் எடை குறைப்பது கடினம். பெண்கள் தங்கள் உடல்நிலை நினைத்து கவலை கொள்ளாமல் மீண்டெழ வேண்டும் என்றும் நமது உடல்கள் மாறலாம் அல்லது மாறாமல் இருக்கலாம்.

ஆனால் நமது ஆர்வம் மாறக்கூடாது என்றும் அதற்கு நாம் தான் முக்கியத்துவம் தர வேண்டும் எனவும் காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். இதனிடையே காஜல் அகர்வால் இந்தியன் 2 திரைப்படத்திற்கு தயாராகி வருவது தெரியவந்துள்ளது.அதுமட்டுமல்லாமல் கமல்ஹாசன் புதிய லுக்கில் இந்தியன் 2 திரைப்படத்தில் மாஸ் என்ட்ரி கொடுக்கிறார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்தியன் 2 திரைப்படத்தை எதிர்நோக்கி மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.