கையில் குழந்தையுடன் சௌந்தர்யா…. வாழ்த்து தெரிவித்து ரஜினி போட்ட போஸ்ட்…. வைரலாகும் க்யூட் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் என்பதை பலரும் அறிந்திருப்போம். அதில் முதல் மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுசை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே சில கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.

இந்நிலையில் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் 2010 ஆம் ஆண்டு அஸ்வின் ராம்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் வித் கிருஷ்ணா என்ற மகன் அவர்களுக்கு உள்ளார். இதரிடையே அஸ்வினைப் பிரிந்த சௌந்தர்யா விசாகன் வணங்காமுடி என்பவரை கடந்த 2019 ஆம் ஆண்டு மறு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கே சில வாரங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

இதனிடையே நேற்று சௌந்தர்யா தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். கையில் குழந்தையுடன் சௌந்தர்யா ரஜினிகாந்த் அமர்ந்திருப்பதும் அவருக்கு பின்னால் ரஜினி நிற்கும் புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Soundarya Rajinikanth இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@soundaryaarajinikant)

மேலும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறி சௌந்தர்யா ரஜினிகாந்த் ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.