பாரதிராஜாவுக்கு மீண்டும் ஏற்பட்ட பிரச்சனை…. திடீரென மருத்துவமனையில் அனுமதி…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் தான் பாரதிராஜா. இவர் இயக்கத்தில் வெளியான மண்வாசனை கலந்த பல்வேறு திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்துள்ளன. அது மட்டுமல்லாமல் 90களில் மிகச் சிறந்த நாயகிகளாக இருந்தவர்கள் பெரும்பாலானோர் பாரதிராஜாவின் மூலம் அறிமுகமானவர்கள் தான். பல முன்னணி இயக்குனர்கள் இவரிடம் தான் பாடம் கற்றுக் கொண்டனர். இவர் இயக்கத்தில் உருவாகும் அனைத்து படங்களுமே நல்ல கருத்து கதை கரு கொண்ட படங்களாக தான் இருக்கும். இவர் சமீபகாலமாக ஒரு சில படங்களில் கூட சித்திர வேடங்களில்  நடித்து வருகின்றார்.

இதனிடையே பாரதிராஜா கடந்த ஆகஸ்ட் மாதம் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாரதிராஜாவுக்கு அஜீரண கோளாறு மற்றும் நீர்ச்சத்து குறைபாடு இருப்பதாகவும் அதற்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

அதன் பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது உடல் நிலையில் போதிய முன்னேற்றம் இல்லாததால் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அமந்தகரை எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சுமார் பத்து நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பாரதிராஜா பின்னர் உடல் நலம் தேறி வீடு திரும்பினார்.

இந்நிலையில் மீண்டும் ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.இந்த தகவல் அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அவருக்கு சிறுநீரக குழாயில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.