தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்துள்ளனர்.இவர் இறுதியாக நடித்த டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் நடிகர் சங்கரின் மகள் அதிதி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கின்றார். இப்படத்திற்கான பூஜை அண்மையில் நடைபெற்றது. இதனிடையே இவரின் நடிப்பில் அடுத்ததாக பிரின்ஸ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் திருச்சியில் இருந்து வந்தவர் என்பது பலரும் அறிந்தது தான். அவரின் அப்பா ஒரு போலீஸ் அதிகாரி.

ஆனால் தற்போது அவர் உயிரோடு இல்லை. தனது மகன் மூலமாக தனது அப்பா பிறந்திருக்கிறார்.இதனிடையே சிவகார்த்திகேயன் தனது அப்பாவுடன் வசித்த அவரின் நினைவுகள் உள்ள திருச்சி வீட்டில் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
