திடீரென ஓடி வந்த நபர்…. பதறிப்போன திரிஷா…. கூலாக ஆடிக்கொண்டே வந்த விக்ரம்……!!!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை திரிஷா. இன்றளவும் நடிப்பிலும் சரி அழகிலும் சரி லட்சக்கணக்கான ரசிகர்களை கொள்ளை அடிப்பவர். இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்கு முன்பு சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன்.இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியான நிலையில் அதில் திரிஷா கதாபாத்திரத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின் போது திரிஷா சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போது ரசிகர் ஒருவர் அவரிடம் செல்ஃபி எடுக்க ஓடிவரும் போது அதனைக் கண்டு திரிஷா பதறிப்போன வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அது மட்டுமல்லாமல் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் மற்றும் கார்த்தி உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இதரிடையே விக்ரம் ஷூட்டிங் ஸ்பாட்டில் கூலாக ஆடிக்கொண்டே வந்து ரசிகர்களுடன் நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளும் காட்சியும் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.