ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் கதிர். இவர் தன்னுடைய நடனத் திறமையை காட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் நடனத் திறமையின் மூலம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த சீரியலில் இவர் அருண் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.இன்னும் சொல்லப்போனால் சீரியல் இன் கடைசி வரைக்கும் அந்த கதாபாத்திரத்தில் கதிரின் நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அந்த சீரியலில் பணக்கார வீட்டு இளைய மகனாகவும் பொறுப்பில்லாத தம்பியாகவும் இருந்தவர். ஆனால் உண்மையைச் சொல்லப் போனால் இவர் ஒரு ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர் தான்.

இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சிந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரின் திருமணத்தில் பல பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இதனிடையே செம்பருத்தி சீரியல் அண்மையில் முடிந்த நிலையில் இவருக்கு மட்டுமல்லாமல் இவருடைய ரசிகர்களுக்கும் இது வருத்தத்தை கொடுத்தது .

இதனிடையே கதிர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அழகான பதிவை பதிவிட்டுள்ளார்.அதாவது கதிருக்கு அழகான பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியான செய்தியை தனது ரசிகர்களிடம் அவர் பகிர்ந்து உள்ளார். அதே சமயம் தன்னுடைய செல்ல மகளுக்கு உருக்கமான கவிதை ஒன்றையும் அவர் எழுதியுள்ளார்.

நேற்று மகள்கள் தினம் என்பதால், தனது சந்தோசத்தை பதிவாக வெளியிட்டு இருக்கிறார். அதில் மகள்கள் தினத்தை கொண்டாடும் ஒவ்வொரு தந்தைக்கும் மகிழ்ச்சி. .!! நானும் என் மகளுடன்! ஆம்….. எங்களுக்கு அழகான இளவரசி வந்து விட்டாள் என பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கதிருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.