தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். இந்தத் திரைப்படத்தில் நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர்,பாரதிராஜா மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.அன்னையில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படம் கடந்த மாதம் 19 ஆம் தேதி வெளியான நிலையில் இதற்குப் பிறகு திரைக்கு வந்த பல படங்களும் ரசிகர்களின் விருப்பத்தை பெற தவறி விட்டன. இப்படத்தில் தனுஷ் மற்றும் நித்தியா மேனன் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அனிருத் திசையில் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தில் மிகவும் பிரபலமான மேகம் கருக்காத பாடலை தனுஷ் பாடி அசத்தியுள்ளார். திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஹிட்டானதற்கு முக்கிய காரணம் இந்த பாடல் என்றும் கூறலாம். இந்நிலையில் இந்த பாடலில் தனுஷ் மற்றும் நித்தியா மேனன் நடனம் காண்போரை வியக்க வைத்தது.இதனிடையே அந்த நடனத்திற்கு பிராக்டிஸ் செய்யும்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.