“மீண்டும் என்னை இருளுக்குள் இருக்க முயற்சி”….. இதுதான் உங்களுக்கு சந்தோசமா…. நடிகை பாவனா வேதனை….!!!!

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை பாவனா. இளைஞர்களின் கனவு கன்னியாகவும் வளம் வந்தவர். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.இவரின் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். இதனிடையே நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஐந்து வருடங்கள் கழித்து மலையாளத்தில் ஒரு படத்தில் பாவனா நடித்து வருகிறார்.

இதனிடையே பாவனாவுக்கு சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோல்டன் விசா வழங்கி கௌரவித்தது. இந்த விழாவில் பாவனா அணிந்திருந்த உடை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் ஆக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 5 வருடங்கள் கழித்து மலையாள சினிமாவுக்கு திரும்பி இருக்கும் பாவனா மீது எழுந்த இந்த சைபர் தாக்குதலுக்கு அவர் வருத்தம் தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், எனது அன்புக்குரியவர்கள் காயமடையாமல் இருக்கவும், நானும் ஒரு நாள் எல்லாம் சரியாகிவிடும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கும் போது எதிர்மறையான கருத்துக்கள்,துஷ் பிரயோகங்கள் மூலம் என்னை மீண்டும் இருளுக்குள் இழுக்க முயற்சிப்பவர்கள் இருப்பதை அறியும்போது மிகுந்த வேதனை அளிக்கிறது.

இது போன்ற செயல்கள் மூலம் தான் அவர்கள் சந்தோசம் காண விரும்பினால் நான் அவர்களை தடுக்கவில்லை என்று பாவனா மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் அவரின் ஆடை குறித்த சர்ச்சைக்கு அவர் விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அது தொடர்பான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.