தமிழ் சினிமாவில் 90-களில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் குஷ்பூ. இவரின் படங்கள் அனைத்துமே எப்போதும் ஹிட் கொடுக்கும். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம்,கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவருக்கும் இயக்குனர் சுந்தர் சி அவர்களுக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.

குஷ்பூ மற்றும் சுந்தர் சி தம்பதியினருக்கு அவந்திகா மற்றும் அனந்திதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அவரின் மூத்த மகள் அவந்திகா நடிகையாக போகிறார் என்று அண்மையில் குஷ்பூ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். தாங்கள் யாரும் உதவி செய்யப் போவதில்லை என்றும் தனது மகள் சொந்த முயற்சியில் பட வாய்ப்புகள் பெற வேண்டும் எனவும் குஷ்பூ தெரிவித்துள்ளார்.

எப்போதும் அவந்திக்கா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார். தற்போது குஷ்பூ உடல் எடையை குறைத்து மீண்டும் இளம் ஹீரோயினி போல காட்சி அளிக்கும் நிலையில் தற்போது அவரின் மூத்த மகள் அவந்திகா தனது உடல் எடையை குறைத்து மாடன் உடையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

இந்நிலையில் குஷ்புவின் முதல் மகள் அவந்திக்கா தனது 22 வது பிறந்த நாளை இன்று கொண்டாடும் நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக குஷ்பூ சிறுவயதில் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.