சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவன்யூ என்ற பகுதியில் வசித்து வரும் பவுலின் தீபா என்பவர் சினிமா துணை நடிகையாக உள்ளார். 29 வயதாகும் இவர் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் மற்றும் வாய்தா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் சென்னையில் உள்ள தனது வீட்டில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அதன் பிறகு போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காதல் தோல்வியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.போலீசார் தீபாவின் செல்போனை ஆய்வு செய்து தற்கொலைக்கு முன் சிராஜுதீனிடம் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் அவர் காதலனிடம் பேசியதை விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நடிகை தீபாவின் குடியிருப்பு அருகே உள்ள சிசிடிவி கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்ததில், தீபா வெளியில் சென்று விட்டு ஆட்டோவில் திரும்பி வந்து சோர்வாக தனது ரூமிற்கு நடந்து செல்கிறார். தற்கொலை செய்து கொண்ட நடிகை பவுலின் தீபாவின் காணாமல் போன ஐபோன் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நடிகை தீபா தற்கொலை செய்து கொண்ட போது கதவை உடைத்து பார்த்த பிரபாகரனிடமிருந்து ஐபோனை போலீசார் மீட்டு உள்ளனர். மொத்தமாக தீபா பயன்படுத்திய மூன்று செல்போன்கள் மற்றும் ஒரு டேப் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பவுலின் தீபாவின் காதலர் மற்றும் அவரின் நண்பர் இருவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.