“சார் நீங்க கிரேட்”…. பாதுகாப்பு வீரரை பார்த்ததும் அஜித் செய்த செயல்…. இணையத்தை தெறிக்கவிடும் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் அஜித். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்துள்ளனர். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.

இதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஏகே 61 படத்தில் நடிகர் அஜித் பிஸியாக உள்ளார். இதில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இதனை தொடர்ந்து சமீபத்தில் படத்தின் அதிகாரப்பூர்வ பஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்ப படத்தின் சூட்டிங் திடீரென நிறுத்தப்பட்டது.

அதாவது அஜித் காஷ்மீர் மற்றும் லடாக்கென வட இந்திய எல்லையில் உள்ள குடி பிரதேசங்களில் தனது நண்பர்களுடன் இணைந்து ஜாலியாக பைக் ரைடு சென்று இருந்தார். அவருடன் நடிகை மஞ்சுவாரியாரும் இணைந்தார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து மீண்டும் படத்தின் சூட்டிங் தற்போது தொடங்க உள்ளது.

அதற்காக படக்குழுவினர் பாங்காங் செல்ல இருக்கின்றனர். இந்நிலையில் பாங்காங் செல்ல அஜித் மற்றும் மஞ்சு வாரியார் இருவரும் சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். அங்கு எடுக்கப்பட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அஜித் அங்குள்ள பாதுகாப்பு வீரரை பார்த்து விட்டு சென்றுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.