தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட முதலிட பழமொழி படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை கனிகா. இவர் நடித்துள்ள பல படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சென்னையில் நடந்த மிஸ் சென்னை என்ற போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றதன் மூலம் இவருக்கு சினிமாவில் நுழையும் வாய்ப்பு கிடைத்தது.

இவர் முதன்முதலாக கடந்த 202ஆம் ஆண்டு பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதுமட்டுமல்லாமல் பின்னணி குரலும் கொடுத்துள்ளார். அதாவது விஜய் நடிப்பில் வெளியான சச்சின் திரைப்படத்தில் ஜெனிலியாவிற்கு குரல் கொடுத்தவர் இவர்தான். ஒரு காலகட்டத்தில் சினிமாவில் இவருக்கு மார்க்கெட் குறைந்ததால் சீரியலில் நடிக்க தொடங்கினார்.

சன் டிவியில் ஒளிபரப்பான பல சீரியல்களிலும் நடித்துள்ள இவர் தற்போது எதிர்நீச்சல் என்ற சீரியலில் கஸ்தூரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இதனிடையே இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு ஷியாம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ரிஷி என்ற ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் தனது மகனின் உடல்நிலை குறித்து கனிகா ஒரு அதிர்ச்சி தரும் தகவலை பகிர்ந்துள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
அதாவது தன் மகன் பிறந்ததும் தன்னிடம் காட்டவில்லை, குழந்தையின் இருதயத்தில் பிரச்சனை இருப்பதாக கூறி இரவு வரை அவர் உயிரோடு இருக்க மாட்டார் என கூறினார்கள். ஐ சீ யூ வில் எனது மகனைப் பார்த்ததும் என் மனம் இரண்டாக உடைந்து போனது. அதன் பிறகு ஏழு மணி நேர ஆபரேஷனுக்கு பின்னர் என் மகனை பிழைக்க வைத்து விட்டனர். என் மகனை இன்று வரை பத்திரமாக பார்த்து வருகிறேன் என அவர் பகிர்ந்து உள்ள தகவல் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.