பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தீபிகா படுகோன். இவர் தற்போது ஷாருக்கான் உடன் பதான் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படம் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது.பதான் திரைப்படத்தை தவிர தீபிகா படுகோனே பைட்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு மனைவியாக நடித்து வருகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் தீபிகா படுகோனேவுக்கு நேற்று இரவு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டதாகவும் உடனே அவர் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவமனையில் தீபிகாவுக்கு பல பரிசோதனைகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அவர் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பிறகு வீடு திரும்புவார் என கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் தீபிகா மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதனாலே அவருக்கு உடல் நல பாதிப்பு திடீரென ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது.மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் இப்போது அவர் உடல்நலம் நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
