தமிழ் சினிமாவின் முன்னணி பாடகையாக வளம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா.இவர் பாடகியாக மட்டுமல்லாமல் ரேடியோ ஜாக்கி ஆகவும் பல ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பழமொழிகளிலும் இதுவரை 100க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி அசத்தியுள்ளார். இவர் முதன்முதலாக ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார்.

அதன் பிறகு அந்த வெற்றியை தொடர்ந்து ஹலோ சென்னை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சி பட்டித்தொட்டி எல்லாம் பரவலான நிலையில் இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. அதேசமயம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான ஸ்ரேயா, தமன்னா போன்ற பல நடிகைகளுக்கு இவர் டப்பிங் பேசியுள்ளார்.

அதேசமயம் நல்ல ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி நாயகியாக வலம் வந்த இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு சுச்சி லீக்ஸ் என்பதால் பல சர்ச்சைகளில் சிக்கி தற்போது காணாமல் போய்விட்டார். இதனிடையே சுசித்ரா கடந்த 2005 ஆம் ஆண்டு நடிகர் கார்த்திக் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திருமணம் பல வருடங்கள் மட்டுமே நீடித்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
இதனைத் தொடர்ந்து கார்த்திக் மறுமணம் செய்து கொண்டு தனது பணியில் கவனம் செலுத்தி வருகின்றார். சுசித்ரா குறித்த தகவல்கள் எதுவும் அவ்வளவு அதிகமாக இணையத்தில் தற்போது வெளியாவதில்லை. இந்நிலையில் சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் தன்னது இன்ஸ்டாகிராம் பதிவில் அண்மையில் பதிவிட்ட ஒரு புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.