6 நாட்களில் இத்தனை கோடி வசூலா?…. கபாலி திரைப்படத்தின் உண்மையான வசூல்…. அவிழ்த்து விட்ட தயாரிப்பாளர்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அறியப்படும் ரஜினிகாந்த்.இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். அவ்வகையில் இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாத நிலையில் தற்போது ரஜினி ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே ரஜினி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த கபாலி திரைப்படத்தின் வசூல் குறித்த ஒரு தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கபாலி. இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ராதிகா அப்டே, கலையரசன், சாய் தன்சிகா மற்றும் கிஷோர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

தயாரிப்பாளர் கலைபுலி எஸ்.தானுவின் ப்ரோமோஷன் என்ற திரைப்படத்தில் இடம் பெற்றிருந்ததால் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு இந்த திரைப்படத்தை பிரமோஷன் செய்திருந்தார். இதனிடையே ரஜினியின் நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் கபாலி படத்தில் ரஜினிக்கு வெறும் மாஸ் காட்சிகள் மட்டுமே இருந்தால் போதும் என்ற அளவிற்கு ஹீரோவுக்கான கதை எழுதி சொதப்பிவிட்டதாக அந்த திரைப்படத்தை குறித்து ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

அதனால் இந்த திரைப்படம் தோல்வியை தழுவிய படமாகவே தெரிந்தது. ஆனால் தற்போது அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு, பிரபல தொலைக்காட்சியில் பேசியபோது, கபாலி திரைப்படத்தின் உண்மையான வசூல் ஆயிரம் கோடியாக கூட இருக்கலாம் என கூறியுள்ளார். அதாவது திரைப்படம் வெளியான முதல் ஆறு நாட்களிலேயே 320 கோடி வசூலை குவித்ததாக அவர் கூறியுள்ளார்.