நிறைவேறாமல் போன மீனாவின் கனவு…. “எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு”…. வைரலாகும் மீனாவின் இன்ஸ்ட்டா பதிவு….!!!!

தமிழ் சினிமாவில் 90களில் பலரில் உள்ளங்களையும் கவர்ந்து தனது நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. அவரின் திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்தாலும் சமீப காலமாக அவர் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன்படி அவர் இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது அவர் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். பத்து வருடங்களுக்கு மேல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் எட்டாம் தேதி மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென உயிரிழந்தார்.

அவரின் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது மீனா மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறார்.இந்நிலையில் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு இன்று வெளியாகி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து மீனா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Meena Sagar இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@meenasagar16)

அந்தப் பதிவில்,பொன்னியின் செல்வன் படத்தில் உள்ள நந்தினி கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பது தனது மிகப்பெரிய கனவு. நந்தினி கேரக்டரில் நடிக்க ஐஸ்வர்யா ராய்க்கு வாய்ப்பு கிடைத்துள்ளது தனக்கு மிகவும் பொறாமையாக இருக்கு. முதல் முதலாக அவரைப் பார்த்து நானே பொறாமை பட்டுள்ளேன் என கூறியுள்ள மீனா பட குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.