உலகப் புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்தத் திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், அஸ்வின்,கிஷோர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தியும், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். அதில் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திரிஷாவும் தங்களது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இந்தத் திரைப்படத்திற்கு ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். ஏ ஆர் ரகுமான் இசையில் லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.

இதில் முதல் பாகம் பொன்னியின் செல்வன் 1 இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்டு ஐந்து மொழிகளில் வெளியாகி உள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ்புல் ஆகி உள்ளன. டிக்கெட்டுகள் அனைத்தும் ஒரே நாளில் விற்று தீர்ந்தது.

இதனிடையே இன்று வெளியான பொன்னியின் செல்வன் படத்தை படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் பலரும் திரையரங்குகளில் கண்டு ரசித்தனர். அவ்வகையில் படத்தை பார்த்துவிட்டு திரையரங்கில் இருந்து வெளியே வந்த ஜெயம் ரவி படம் குறித்து அளித்த பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.