மகனுக்காக அமெரிக்காவில் செட்டிலான நெப்போலியன்…. என்ன தொழில் செய்கிறார் தெரியுமா?…. வாயடைத்துப் போன ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் தனது நடிப்பு திறமையால் ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தை வெகுவாக கவர்ந்த நடிகர் நெப்போலியன். இவர் அந்த காலகட்டத்தில் நடிப்பில் கொடிகட்டி பறந்தவர். பல திரைப்படங்களில் ஹீரோவாகவும் பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது வரை வில்லன் கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்தாலும் ஒரு சில படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் தற்போது தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் வசித்து வருகின்றார். இவருக்கு ஜெயசுதா என்ற மனைவியும் தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். அவரின் மூத்த மகன் தனுசுக்காக அமெரிக்காவில் செட்டில் ஆகி உள்ளார்.

சிறிது காலம் பிரேக் எடுத்துக் கொண்ட நெப்போலியன் தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து சினிமாவில் கலக்கி வருகிறார். தமிழ் சினிமாவை தாண்டி ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் மூத்த மகனான தனுஷ் நடக்க முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அமெரிக்காவில் அவருக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கப்பட்டு வருகிறது. அவருக்காக தான் மொத்த குடும்பமும் அமெரிக்காவில் செட்டிலாகி உள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் நெப்போலியன் நடத்தி வரும் மெயின் பிஸ்னஸ் ஐடி கம்பெனி தான்.அவர் ஜீவன் டெக்னாலஜி என்ற பெயரில் கடந்த 23 வருடங்களாக ஐடி கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். அவரின் மனைவி அந்த நிறுவனத்தின் பைனான்ஸ் விஷயங்களை கவனித்து வருவதாக கூறப்படுகிறது. மற்ற நடிகர்களுடன் ஒப்பிடுகையில் நெப்போலியன் சற்று வித்தியாசமாக ஐடி நிறுவனம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்லாமல் நெப்போலியன் தற்போது அமெரிக்காவின் கிரீன் கார்டு வைத்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது .இவர் படிக்கவில்லை என்றாலும் பணம் முதலீடு செய்து அந்த நிறுவனத்தின் மூலமாக பல இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பை வழங்கி வருகின்றார். இந்நிலையில் ஐடி நிறுவனத்தின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.