அமீருடன் காதல்…. “இது நடந்தா நல்லா இருக்கும்”…. முதல் கணவர் பற்றி பாவனி சொன்ன ஷாக் நியூஸ்….!!!!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தான் பாவனி மற்றும் அமீர். விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியல் இன் மூலம் அறிமுகமானவர் பாவனி. பின்பு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் வைல் கார்டு என்ட்ரி மூலம் உள்ளே வந்தவர் அமீர். அதன் பிறகு அவர் பாவனியிடம் நெருக்கமாக பழகியதால் இருவரும் காதலிக்கிறார்கள் என்று பலரும் கூறி வந்தனர்.

பிக் பாஸ் முடிந்த பிறகும் கூட இருவரும் வெளியிடங்களில் ஒன்றாக தான் சுற்றி வருகிறார்கள்.அண்மையில் விஜய் டிவியில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டு அசத்தினர்.விஜய் டிவியில் தற்போது காதல் புறாக்களாக பலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை பாவனிக்கு பிரதீப் குமார் என்பவர் உடன் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென பிரதீப் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். அவரின் பிரிவிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்த பாவனி இந்த சோகத்தை மறக்க பல வருடங்கள் ஆனது. இதனிடையே இவர் அமீரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக வெளியாகி வரும் தகவலை பார்த்து ரசிகர்கள் பலரும் அவரின் வருங்காலம் நன்றாக அமைய வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் பாவனை அளித்த பேட்டி ஒன்றில்,உங்கள் வாழ்க்கையில் திரும்பி நடக்க வேண்டும் என்று நினைக்கும் தருணங்கள் என்ன என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பாவனி, நான் என் கணவர் திரும்பி வரவேண்டும் என நினைக்கிறேன். நான் அமீரை காதலிப்பது உண்மைதான்.

இதனால் நான் இரண்டு நிலைப்பாட்டில் இருப்பதாக யாரும் நினைக்காதீங்க. என் கணவர் திரும்பி வந்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். எனக்கு தெரியாமலேயே அவர் என்னை விட்டுப் போய்விட்டார்.மீண்டும் அந்த வாழ்க்கை எனக்கு திரும்ப கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன் என கண்கலங்கி பேசியுள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.