சின்னத்திரையில் சூப்பர் ஜோடியாக கலக்கிய பலரும் தற்போது நிஜ வாழ்க்கையில் கணவன் மனைவியாக ஒன்று சேர்ந்துள்ளனர். அவ்வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து ஜோடி சேர்ந்தவர்கள் தான் செந்தில் மற்றும் ஸ்ரீ ஜா. கேரளாவில் பிறந்த ஸ்ரீ பூஜா கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் சீரியலில் நடிக்க தொடங்கினார். இவர் இதுவரை 40க்கும் மேற்பட்ட சீரியல்கள் மற்றும் வெப் சீரியஸ்களில் நடித்துள்ளார்.

அதில் குறிப்பாக இவருக்கு நல்ல பெயரை தேடி தந்தது சரவணன் மீனாட்சி சீரியல் தான். இதில் ஜோடியாக நடித்த செந்தில் மற்றும் ஸ்ரீ பூஜா இருவரும் நிஜ வாழ்க்கையிலும் ஒன்று சேர வேண்டும் என ரசிகர்கள் பலரும் கூறி வந்தனர்.முதலில் தாங்கள் நண்பர்கள் என்று கூறி வந்த இவர்கள் ஒரு கட்டத்தில் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் திடீரென திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து இவர்களுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டனர்.

இதனிடையே திருமணத்திற்கு பிறகு ஸ்ரீ ஜா தமிழில் கணவருடன் இணைந்து வெப் சீரிஸ் நடித்தார்.இதனிடையே அவ்வபோது இவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் திருமணம் ஆகி 8 வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீஜா கர்ப்பமாகி உள்ளதாக மிகுந்த மகிழ்ச்சியுடன் ரசிகர்களுக்கு இந்த தகவல்களை செந்தில் மற்றும் ஸ்ரீஜா ஜோடி பகிர்ந்துள்ளனர். வீட்டில் வளைகாப்பு விழா நடைபெற்று உள்ளது.அந்த புகைப்படத்தை செந்தில் தனது instagram பக்கத்தில் மகிழ்ச்சியாக பகிர்ந்து உள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
