விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோகளில் அதிக அளவிலான ரசிகர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதில் இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில் மிக விரைவில் ஆறாவது சீசன் தொடங்க உள்ளது. அதற்கான ப்ரோமோ சமீபத்தில் ஒளிபரப்பானது. இந்நிலையில் தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் ஆரம்பத்திலிருந்து தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது ஆறாவது சீசனுக்கும் அவர்தான் தொகுப்பாளராக உள்ளார்.

அதனால் எதிர்பார்ப்பு தற்போது மேலும் அதிகரித்துள்ளது.அது மட்டுமல்லாமல் போட்டியாளர்களாக யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்று ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.தற்போதைய தகவலின்படி பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் இரண்டாம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீப காலமாக பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அதன்படி விஜே ரக்சன், பாரதி கண்ணம்மா ரோஷினி, ராஜா ராணி அர்ச்சனா, ரவீந்தர் மகாலட்சுமி, சரவணன் மீனாட்சி ரச்சிதா, சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, சீரியல் நடிகை ஸ்ரீநிதி, விஜே அஞ்சனா,மைனா நந்தினி மற்றும் ஜி.பி முத்து உள்ளிட்டோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களுடன் தொகுப்பாளினி டிடியும் கலந்து கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
