தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் யோகி பாபு. இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களிலும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியுள்ளார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான யோகி என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார்.

அந்தப் படத்திற்கு பிறகு தான் பாபு என்ற தனது பெயரை யோகி பாபு என மாற்றிக்கொண்டார்.திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மான் கராத்தே மற்றும் யாமிருக்க பயமே உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்து அசத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். குறிப்பாக காக்கா முட்டை என்ற திரைப்படம் தான் இவருக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. இவர் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் தனியாக பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

அதாவது யோகி பாபு நடிப்பது மட்டுமல்லாமல் மேலும் பல புதிய விஷயங்களையும் செய்துள்ளார்.அதாவது அவர் சொந்தமாக கதை மற்றும் திரைக்கதை வசனம் ஒரு பணத்திற்கு எழுதி அதில் ஹீரோவாக நடிக்கின்றார். ரமேஷ் சுப்பிரமணியம் என்பவர் அந்த திரைப்படத்தை இயக்குகிறார். இந்த திரைப்படத்தின் பூஜை தற்போது முருகன் கோவிலில் நடைபெற்ற நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
