ஒரு நாளைக்கு இத்தன கோடியா?…. அந்த படத்தில் நடிக்க இவ்வளவு சம்பளம் தான் வேணும்…. டைரக்டரை அதிர வைத்த சத்யராஜ்….!!!!

தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் கலக்குபவர் நடிகர் சத்யராஜ். இவர் பல வகையான திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் நடித்துள்ளார். அவர் அந்த காலத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் கொடி கட்டி பறந்தவர். தற்போதும் கூட பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால் அப்போது இருந்த நடிப்பின் வலிமை இப்போதும் சத்யராஜ் நடிப்பில் உள்ளது.

சத்யராஜுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். அவரின் மகன் சிபிராஜ் தனது தந்தையைப் போலவே சினிமாவில் கலக்கி வருகிறார். இந்நிலையில் கமல் மற்றும் சங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிப்பதற்காக சத்யராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்தியன் 2 திரைப்படத்தில் ஒரு முக்கிய போலீஸ் ரோலில் சத்யராஜை நடிக்க வைப்பதற்கு சங்கர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் படத்தில் நடிப்பதற்கு சத்யராஜ் சம்பளத்தை கேட்டு சங்கர் மற்றும் லைகா என எல்லோரும் ஷாக் ஆகியுள்ளனர். அதாவது ஒரு நாளுக்கு ஒரு கோடி சம்பளம் கொடுங்க என சத்தியராஜ் கண்டிப்பாக கேட்டு உள்ளாராம். இது தொடர்பாக தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.அது மட்டும் அல்லாமல் இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் அதிர வைத்துள்ளது.