உலகப் புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்தத் திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், அஸ்வின்,கிஷோர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தியும், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். அதில் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திரிஷாவும் தங்களது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இந்தத் திரைப்படத்திற்கு ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். ஏ ஆர் ரகுமான் இசையில் லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியான இந்த திரைப்படம் இதுவரை 300 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. இதனால் பட குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளன. இந்நிலையில் உலகம் முழுவதும் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வர ஹாலிவுட் நடிகை ஒருவரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதாவது ஹாலிவுட் நடிகையான இவர் பொன்னியின் செல்வன் சூப்பர் என கமெண்ட் செய்துள்ள நிலையில் ரசிகர்கள் அந்த ட்விட்டர் போஸ்டுக்கு லைக் குவித்து வருகிறார்கள்.
okay ponniyin selvan was amazing????❤️
— Maitreyi Ramakrishnan (@ramakrishnannn) October 7, 2022