5 வருட இடைவேளைக்கு பிறகு…. மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை…. செம குஷியில் ரசிகர்கள்….!!!!

தென்னிந்திய சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை பத்மப்ரியா ஜனகிராமன். இவர் சேரனின் தவமாய் தவமிருந்து என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். மலையாள நடிகையான இவர் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களிலும் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

நடிப்பு மட்டுமல்லாமல் பரதநாட்டிய கலைஞராக திகழ்ந்த இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு சீனு வசந்தி லட்சுமி என்ற தெலுங்கு மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதுமட்டுமல்லாமல் பல மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் தவமாய் தவமிருந்து என்ற திரைப்படத்தில் எண்ட்ரி  கொடுத்ததன் மூலம் முதல் படத்திலேயே சிறந்த பெண் அறிமுகத்திற்கான விருதை தட்டிச் சென்றார்.

அதன் பிறகு பட்டியல், சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம் மற்றும் பிரம்மன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்தத் திரைப்படங்களில் நடித்த போதிலும் இவருக்கு போதுமான வரவேற்பு கிடைக்காததால் தமிழில் இருந்து மீண்டும் மலையாள திரைப்படங்களில் அதிகமாக நடிக்கச் சென்றார். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு குஜராத்தை சேர்ந்த ஜாஸ்மின் ஷா என்பவரை மும்பையில் திருமணம் செய்து கொண்ட நிலையில் 2017 ஆம் ஆண்டு நடிப்பில் இருந்து ஓய்வு பெற்றார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Padma Priya இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@padma.priya__)

இந்நிலையில் கிட்டத்தட்ட ஐந்து வருட இடைவேளைக்கு பின்னர் தற்போது மீண்டும் திரைத்துறைக்கு திரும்பி உள்ளார். அதாவது ஒரு தெக்கன் தள்ளு கேஸ் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் மீண்டும் தனது நடிப்பு உலகிற்குள் நுழைந்துள்ளார்.இதனைத் தொடர்ந்து அவருக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.