கே ஜி எஃப் ராக்கி பாய் கெட்டப்பில் மாறிய கேப்டன் மகன்…. போட்டோவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்…. இது வேற லெவல்….!!!!

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவரின் ஆக்சன் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே வெற்றி தான். அந்த அளவிற்கு தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். தமிழ் ரசிகர்களால் கேப்டன் என்று அன்பாக அழைக்கப்படுபவர்.பல்வேறு புகழுக்குரிய இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு பிரேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சண்முக பாண்டியன் மற்றும் விஜய பிரபாகரன் என்ற இரு மகன்கள் இருக்கின்றன.

அவரின் மகன் சண்முக பாண்டியனும் தமிழில் பிரபல நடிகராக வலம் வர முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற திரைப்படத்தினை இயக்குனர் சுரேந்திரன் இயக்கி இருந்த நிலையில் அதில் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்திருந்தார். அதுதான் இவர் ஹீரோவாக அறிமுகமான முதல் படம்.

ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதனைத் தொடர்ந்து மதுரவீரன் என்ற திரைப்படத்தில் சண்முக பாண்டியன் நடித்திருந்தார். ஆனால் அந்தப் படமும் வெற்றி பெறவில்லை என்பதால் சண்முக பாண்டியன் சினிமாவிற்கு பிரேக் கொடுத்தார்.தற்போது பல வருடங்களுக்குப் பிறகு சசிகுமார் இயக்கி வரும் குற்ற பரம்பரை என்ற வெப் தொடரில் நடித்து வருகின்றார்.

தற்போது குற்றப்பரம்பரை நாவலை படமாக்கும் முயற்சியில் நடிகர் மற்றும் இயக்குனருமான சசிகுமார் மும்முரமாக களமிறங்கியுள்ளார். அதில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கின்றார்.இந்தத் திரைப்படத்திற்காக அவர் அதிகமாக தாடி மற்றும் முடி வளர்ப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவித்து சண்முக பாண்டியன் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். அந்தப் புகைப்படத்தில் கேஜிஎப் படத்தில் வரும் யாஷ் கெட்ட பில் இருக்கின்றார். இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் பார்ப்பதற்கு அப்படியே ராக்கிபாயாகவே சண்முக பாண்டியன் இருக்கிறார் என கமெண்ட் செய்து புகைப்படத்தை வைராக்கி வருகிறார்கள்.