உலகப் புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்தத் திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், அஸ்வின்,கிஷோர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தியும், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். அதில் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திரிஷாவும் தங்களது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இந்தத் திரைப்படத்திற்கு ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். ஏ ஆர் ரகுமான் இசையில் லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. அதில் முதல் பாகம் பொன்னியின் செல்வன் 1 கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது .

இதனிடையே முதல் ஷோவில் இருந்து சிறந்த வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்று வரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூலில் சக்க போடு போட்டுக் கொண்டிருக்கிறது.இதுவரை தமிழகத்தில் மட்டுமே 200 கோடிக்கும் மேல் பொன்னியின் செல்வன் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் பொன்னியின் செல்வன் தமிழகத்தில் 300 கோடியை தொடும் என கூறப்படுகிறது.

இதன் மூலமாக பாகுபலியின் தமிழக வசூல் 153 கோடியை அசால்ட் ஆக அடித்து நொறுக்கியுள்ளது.தமிழ் சினிமா வரலாற்றில் திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் இவ்வளவு வசூல் ஈட்டி உள்ள முதல் திரைப்படம் பொன்னியின் செல்வன் தான். அதுமட்டுமல்லாமல் விஜயின் பீஸ்ட்,அஜித்தின் விசுவாசம் ஆகிய படங்களின் வசூல் சாதனையையும் இந்த திரைப்படம் முறியடித்து விட்டது.