“என்னை மன்னிச்சிடுங்க”…. பொன்னியின் செல்வன் குந்தவையாக மாறிய விஜய் டிவி பிரபலம்…. இது வேற லெவல்….!!!!!

உலகப் புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்தத் திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், அஸ்வின்,கிஷோர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தியும், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். அதில் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திரிஷாவும் தங்களது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இந்தத் திரைப்படத்திற்கு ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். ஏ ஆர் ரகுமான் இசையில் லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. அதில் முதல் பாகம் பொன்னியின் செல்வன் 1 கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது .

இதனிடையே பொன்னியின் செல்வன் திரைப்படம் ஒரே வாரத்தில் 500 கோடி வசூல் வேட்டை நடத்தியுள்ளது . இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலமாக நீண்ட காலத்திற்குப் பிறகு திரிஷா கம் பேக் கொடுத்துள்ளார். அதில் குந்தவை ரோலில் அவரின் லுக் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

NANJIL VIJAYAN இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@nanjilvijayan)

இதனைத் தொடர்ந்து அவரைப் போலவே கெட்டப் போட்டு பல நடிகைகள் போட்டோ சூட் நடத்தி அதனை இணையத்தில் வைரலாக்கி வரும் நிலையில் விஜய் டிவி நிகழ்ச்சிக்காக நடிகர் நாஞ்சில் விஜயன் குந்தவை த்ரிஷா போல உடை அணிந்து உள்ளார். அப்போது எடுத்த வீடியோவை பகிர்ந்து உள்ள அவர், பொன்னியின் செல்வன் குந்தவை ரசிகர்கள் என்னை மன்னிக்கவும் என குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.